
யாழில் நடைபெற்ற ஹரிகரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பகரமான சம்பவத்தையடுத்து கிடைக்கப்பெற்ற பணத்தை மீள கையளிக்க தீர்மானித்துள்ளதாக Northern Uni யின் ஸ்தாபகரும் நடிகை ரம்பாவின் கணவருமான பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த பணத்தைக்கொண்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான அன்பளிப்பு செய்யப்போவதாக தெரிவித்திருந்தநிலையிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.