☦️தவக்காலம்
– திருத்தந்தை. பிரான்சிஸ்
தவக்காலத்தில் நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள். தியாகம் வயிற்றில் அல்ல, மாறாக இதயத்தை சார்ந்தது.
சிலர் மாமிசம் உண்பதை தவிர்க்கிறார்கள், ஆனால் உடன் பிறந்தோருடனும், உறவினருடனும் பேசுவதில்லை. பெற்றோர்களை சந்திப்பதுமில்லை, அவர்களது தேவைகளை பொருட்படுத்துவம், நடை முறைபடுத்துவதுமில்லை, தேவையில் உள்ளோருடன் உணவை பகிர்வதில்லை, குழந்தைகளை அவர்களுடைய தந்தையை பார்க்கவும், தாத்தா-பாட்டி தங்களது பேரக்குழந்தைகளை பார்க்கவும் தடை செய்கிறார்கள்.
மற்றவர்களுடைய வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள், மனைவியை அடிக்கிறார்கள். ஒரு மாமிச துண்டு உங்களை நல்லவராகவும், ஒரு மீன் துண்டு உங்களை புனிதராகவும் மாற்றப் போவதில்லை.
ஆகையால் மனிதருடன் உறவாடுவதன் மூலம், கடவுளுடன் ஆழமான உறவை ஏற்படுத்த விளையுங்கள். குறைந்த ஆணவத்தோடும், மிகுந்த தாழ்ச்சியோடும் வாழ்வோம்.
+திருத்தந்தை.பிரான்சிஸ்+