
யாழ் இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம்(14) இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த 6 மாத குழந்தையின் உடல் இன்றையதினம் அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 14 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் ஹயஸ் வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்ததுடன் தாய் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் இணுவில் பகுதியில் ஹயஸ் வாகனம் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இணுவில் பகுதியை சேரந்த 32 வயதுடைய சயந்தன் , 22 வயதுடைய மனைவி மற்றும் 6 மாதங்களான அவர்களின் பெண்குழந்தை ஆகியோர் சென்ற வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்ததுடன், தாய் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 6 மாத குழந்தையின் உடல் இன்றையதினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.