வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கிவைக்கப்பட்டன.
பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் அலுவலகத்தில் நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய லண்டன் கிளை உறுப்பினர்களான இராஐசுந்தரம் சிங்கவாகனம், பாலசிங்கம் றசியசிங்கம் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் ஊடாக யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் அனுசரணையில் ஒரு இலட்சத்து பதினையாயிரம் ரூபா பெறுமதியில் உதவு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத்து.