
இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ஏற்பட்ட புகையிரதத்துடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிறு குழந்தை உள்ளிட்ட இருவர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.
நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர்
துறைசார் திணைக்களத்துடன் கலந்துரையாடி சமிஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கான் நடவடிக்கை மேற்கொண்டார்.
குறித்த நடவடிக்கை நடைபெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை தற்காலிக ஏற்கபாடாக கிராமத்து இளைஞர் இருவரை காவல் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் அதற்கான மாதாந்த கொடுப்பனவை கட்சி நிதியில் இருந்து வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.