மான்செஸ்டர் சிற்றி அபுதாபி கப் சர்வதேச அக்கடமி தொடர்…! கிளிநொச்சி மண்ணில் இருந்து முதல் வீரர்.

இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற மான்செஸ்டர் சிற்றி கழகத்தின் அக்கடமியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப் படுகின்ற சர்வதேச உதைபந்தாட்ட அக்கடமி அணிகளுக்கிடையிலான இளையோருக்கான உதைபந்தாட்ட தொடரில் இலங்கையின் தேசிய அக்கடமியான றினொன் அக்கட்மி கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதுடன் இவ் அக்கடமியின் 12 வயது பிரிவு அணியில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 வீரர்களில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவனும் கிளிநொச்சி ஸ்ரார் ஈகிள்ஸ் அக்கடமி வீரருமான சுரேஸ்கண்ணா தனுஸ் அவர்கள் இடம்பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 12 வயது அணியில் சர்வதேச தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட
கிளிநொச்சி மண்ணின் முதலாவது வீரருமாவார்.

 

 

கடந்த மாதம் கொழும்பு ரேஸ்கொஸ் மைதானத்தில் தேசிய ரீதியில் இடம்பெற்ற முதல் கட்ட தெரிவில் முதல் 100 வீரர்களுக்குள் இடம்பெற்று பின்னர் இடம்பெற்ற இறுதிக்கட்ட தெரிவில் இறுதி 12 வீரர்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு இவ்வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

பாடசாலை ரீதியிலான உதைபந்தாட்ட போட்டிகளில் கலந்துகொள்ளாத போதும் முழுக்க முழுக்க வீரரின் முயற்சி மற்றும் கிளிநொச்சி ஸ்ரார் ஈகிளிள்ஸ் அக்கடமியின் பயிற்றுவிப்பாளர் அன்ரனி மகீபனின் பயிற்சிகளினூடாக தனது திறமையினை வளர்த்துகொண்டு இம் இவ்வீரர் சர்வதேச தொடர் ஒன்றில் இடம்பெறுவது மிகவும் பாராட்ட வேண்டிய ஓர் விடயமாகும்.

இத்தொடர் மான் செஸ்டர் சிட்டி கழகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்படும் தொடராக இருப்பதுடன் இதில் U8,U10,U12,U16 வயதுப் பிரிவுகளைக் கொண்ட அணிகள் போட்டியிடுவதுடன் உலக புகழ் பெற்ற பல நாடுகளின் அக்கடமி அணிகள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் நியூ யோர்க் சிற்றி அக்கடமி அணி, அவுஸ்ரேலியாவின் மெல்போர்ண் சிற்றி அணி, ஜப்பானின் ஜோக்ககாமா மறினோ சிற்றி அணி, இந்தியாவின் மும்பை சிற்றி அணிகளுடன் தொடரை நடாத்துகின்ற மான்செஸ்டர் சிற்றி அக்கடமி அணியும் இடம்பெற்றுள்ளன. இத்தொடரில் வெற்றி பெறும் அணிகள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிற்றி கழகத்தின் அக்கடமிக்கு செல்லுவதற்கான வாய்ப்பு மற்றும் அவ் அக்கடமி அணியின் பயிற்றுவிப்பாளர்களின் நேரடி ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்பிபைனைப் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews