போரதீவுப்பற்று பிரதேசத்தில் வெல்லாவெளி சமுர்த்தி வங்கிப் பிரிவினரால் சௌபாக்கியா சமுர்த்தி வாரத்தினை முன்னிட்டு இன்று சேதனைப்பசளை உற்பத்தி செயல்முறை திட்டமும், சமுர்த்திப் பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது
சமுர்த்திப் பயனாளிகளின் வாழ்வாதாரத்திற்கென 79 குடும்பங்களுக்கு 10 கோழிக்குஞ்சுகள் வீதம் 790 கோழிக்குஞ்சுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் 1500 கிலோ சேதனைப்பசளை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பிரதேசத்திலுள்ள விவசாயிகள் சேதனைப்பசளை உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி, சமுர்த்தி தலைமை முகாமையாளர் தனேந்திரராசா, முகாமைத்துவப் பணிப்பாளர், பொதுச்சுகாதார பரிசோதகர் குபேரன், விவசாயப்போதனாசிரியர் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.