
அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் பா.உ. ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார்.ஹரீஸ் போன்றவர்களால் தமிழ் பேசும் இனங்களின் உறவுகள் பாதிக்கப்படுகிறது.கல்முனை வடக்கு விடயத்தில் ஹரிஸ் தமிழர்களுக்கு எதிராக செயற்படுகிறார். அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் பா.உ. ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். கல்முனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.