அரசாங்கத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அதிபர் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சபாநாயகர் அனுமதியளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா உயர் நீதிமன்றின் பரிந்துரைகளை உள்ளடக்காது அரசாங்கத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன், சட்டத்தின் விதிகளுக்கேற்ற திருத்தங்களுக்கமைய இந்த சட்டம் தயாரிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.