
யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டில் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 91 இளவயது மகப்பேறுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.