நேற்றைய தினம் புதன்கிழமை மெய்நிகர் வழியில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கொரோனா சூழ்நிலையின் மத்தியில் சாதாரண தர பரீட்சயை எதிர்கொண்ட வடக்கு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வடமாகாணத்தின் கிராமப்புற மாணவர்கள்
பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை பாராட்டத்தக்கது. கடந்தகால தரவுகளுடன் ஒப்பிடுகையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சராசரியாக 70வீத சித்தியை வடமாகாணம் பெற்றுள்ளது.
கொரோனா காரணமாக பாடசாலைகள் இயங்காத நிலையிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்திய கல்விப் புலத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவரால் வடமாகாண பாடசாலைகளில் ஆசிரிய வளப்பங்கீடு உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பபட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் பிரச்சனைகள் இருந்ததை நான் நன்கு அறிவேன். ஆகவே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் முறையான செயற்பாடுகளை முன்னெடுத்து பாடசாலைகள் ஆரம்பித்ததும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறேன்.
என அவர் மேலும் தெரிவித்தார்.