
1994.02.18 அன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கட்டைக்காட்டை சேர்ந்த 10 மீனவர்களது 30ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று(18) அனுஷ்டிக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் பதினெட்டாம் திகதி அதிகாலை சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 மீனவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்
இன்று 18.02.2024 மாலை 03.30மணியளவில் கட்டைக்காடு சென்மேரிஸ்மைதானத்தில் ஆரம்பமான குறித்த நினைவேந்தல் நிகழ்வின் பொதுச் சுடரினை கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் ஏற்றிவைத்தார்
அதன்பின்பு உயிரிழந்த பத்து மீனவர்களினதும் உறவுகள் ஈகைச்சுடரினை ஏற்றி இறந்த தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இறுதி நிகழ்வாக நட்புரீதியான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றதோடு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்படன.