
பருத்தித்துறை லீக்கின் அனுமதியுடன் மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 09 நபர் கொண்ட வட மாகாண ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுன் ஆரம்ப நிகழ்வு இன்று(18.02.2024) இடம்பெற்றது.
மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேசியக்கொடி, கழக கொடி ஏற்றப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.
இதில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பொதுமக்கள்,வீரர்கள் என பலர் கலந்து கொண்டு மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
மாபெரும் தொடரின் ஆரம்பநாள் போட்டியாக ஆணைக்கோட்டை கலை ஒளி விளையாட்டு கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி மோதியிருந்தது.