பதுங்கியிருந்த கடற்படை கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்-மாமுனையில் பரபரப்பு

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து 16.02.2024 வெள்ளிக்கிழமை மாமுனை கடற்பகுதியில் இருந்து சட்டவிரோத கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு கடலுக்கு செல்ல முற்பட்ட போது குறித்த ஆறுபேரும் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

காடுகளில் பெருமளவு குலைகளை வெட்டி Gps உதவியுடன் கடலுக்குள் நிலை நிறுத்தி கணவாய்கள் இனப்பெருக்கம் செய்த பின்னர் சட்டவிரோதமாக தூண்டில்கள் மூலம் கணவாய்களை பிடிப்பதே இதன் நோக்கம்.இந்த தொழில் முறை இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒன்று.கணவாய்களின் இனப்பெருக்கம் அழிவடையும் சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது

இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டவர்கள் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை குறுகிய காலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்த கடற்படையினர் தொடர்ந்து கடல்,தரை என திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews