
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் நேற்றையதினம் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்து சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் உயிர் அச்சத்தால், பேருந்தை அளவான வேகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் அந்த சாரதி அவ்வாறு மெதுவாக செலுத்த முடியாது என்றும், அந்த பெண்ணை கீழே இறங்குமாறும் வற்புறுத்தினார். பின்னர் சாரதியும் நடத்துனரும் இணைந்து அந்த பெண்ணை இடையில் இறக்கி விட்டனர்.
இலங்கையில், அதிலும் குறிப்பாக வடக்கில் அண்மைக் காலமாக பேருந்து விபத்துக்காளானது மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்தவாறே பயணம் செய்கின்றனர். இருப்பினும் பேருந்து சாரதிகள் அவற்றினை எல்லாம் பொருட்படுத்தாது தமது மேலதிக கொடுப்பனவுக்காகவும், அதிக வருமானத்தை பெறும் நோக்கிலுல் செயற்பட்டு வருகின்றனர்.
நேற்றையதினம் குறித்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியானது மிகவும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.