
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள ரக்காடு கிராமத்தின் வனப் பகுதியில் நேற்று காலை முதல் காட்டு தீ பரவி வருகிறது.
இந்த தீயினால் பல ஹெக்டயர் வன பகுதி அழிந்து போயுள்ளது.
இப் பகுதியில் தற்போது கடும் வெப்பமான காலநிலை தோன்றுவதாலும் காற்றும் வீசுவதால் மேலும் தீ பரவும் அபாயமும் காணப்படுவதுடன் தீ பற்றும் பகுதிக்கு தீயை அணைக்க செல்ல முடியாத நிலையில் உள்ளது.
தீ அணைக்க முடியாது போனால் தீ சிவனடி பாத மலை வனப் பகுதிக்கு பரவலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.