
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 2023 நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைச் செயலாளர். கணேசன் கம்சநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக. விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு. மேலைதேய இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமை உரை என்பவற்றை தொடர்ந்து கருத்துரைகளை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி சத்தியபாமா நவரத்தினம். நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அதிபர். கணேசரத்தினம் கிருஷ்ணகுமார். ஆகியோர் ஆற்றியதை தொடர்ந்து சிறப்புரையினை வடமராட்சிவலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து வாசிப்பு மாதத்தை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசீல்கள் மற்றும் சான்றிதழ்களை பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.

இந் நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை ஊழியர்கள், சன சமூக நிலையங்களின் நிர்வாகிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.