*⭕வரலாற்றில் இன்று____FEB20*
*1933 – நாட்சி கட்சிக்கு தேர்தல் நிதி சேர்ப்பதற்காக இட்லர் செருமானியத் தொழிலதிபர்களை இரகசியமாகச் சந்தித்தார்.*
*1935 – அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.*
*1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் போர் விமானங்கள் செருமனியின் வானூர்தி தயாரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தின.*
*1946 – இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து கொண்டு வரப்பட்டது.*
*1962 – மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.*
*1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.*
*1979 – நிலநடுக்கம் காரணமாக H2S நச்சு வாயு பரவியதில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 149 பேர் உயிரிழந்தனர்.*
*1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.*
*1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.*
*1988 – நகர்னோ-கரபாக் தன்னாட்சி மாவட்டம் அசர்பைசானில் இருந்து பிரிந்து ஆர்மீனியாவுடன் இணைய முடிவு செய்தது. இது நகர்னோ-கரபாக் போருக்கு வழிவகுத்தது.*
*1991 – அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில், அந்நாட்டின் நீண்ட நாள் அரசுத்தலைவராக இருந்த என்வர் ஒக்சாவின் மிகப் பெரும் சிலை ஒன்று ஆர்பாட்டக்காரர்களினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.*
*2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.*
*2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.*
*2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர்.*
*2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர்.*