
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 20.02.2024 செவ்வாய்க்கிழமை பல இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை கோப்பாயின் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் சிவஞானம் சிவகணே சிவகோணேஸ்சன் என்பவரிடம் ஐந்து இலட்சத்து அறுபத்தி ஐயாயிரத்து அறுநூறு ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டன.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகலதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று குறித்த மருத்துவ பொருட்களை கையளித்தார்.
