
வடமராட்சி யா/கெருடா இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 02.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் ஆண்டறிக்கையும்,ஆண்டு வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதோடு அதனை தொடர்ந்து அபிவிருத்திசங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.
ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.