பிரான்சின் அடையாளமாக கருதப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரம் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈபிள் கோபுரத்தின் ஊழியர்கள் நினைவுச்சின்னத்தை நிதி ரீதியாக நிர்வகிக்கும் விதத்தை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அதிகாரிகள் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஈபிள் கோபுரம் இன்றும் (21) பார்வையாளர்களுக்காக திறக்கப்படாது என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊழியர்கள் 19 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்ததுடன், இன்றும் தொடர்வதாகவும் நிதி பிரச்சினைக்காக இரண்டு மாதங்களுக்குள் ஈபிள் கோபுரத்தில் நடக்கும் இரண்டாவது வேலைநிறுத்தமாகுமாகும்.
ஈபிள் கோபுரம் – பாரிஸின் மிகவும் பிரபலமானது – அதன் இணையதளத்தின் படி, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது, அவர்களில் முக்கால்வாசி பேர் வெளிநாட்டினர். மூடல்கள் மற்றும் கொவிட் தொற்றுநோயினால் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது, ஆனால் 2022 இல் 5.9 மில்லியனாக மீண்டது. இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதால் பாரிஸுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.