ஹற்றன் நைஷனல் வங்கியால் வாழ்வாதார நிதி உதவி….

கொரோணா பெருந்தொற்று  காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து தமது வங்கியுடன்  கொடுக்கல் வாங்கலை செய்கின்ற வாடிக்கையாளர்களுக்கு சமூகப் பொறுப்பு நிலையிலிருந்து அன்பளிப்பாக கொடுத்து அதிலிருந்து அவர்கள், தங்களுடைய தொழிலையும்,  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பணியாற்றிக் கொண்டிருப்பதாக கற்றன் நசனல் வங்கியின்  நுண்நிதிக்கடன் உறவுத்துறை பிராந்திய முகாமையாளர் செ.செந்தூரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது .உதாரணமாக இலங்கை முழுவதும் 200 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வடமாகாணத்தில் இரண்டு பகுதியாக அதாவது முதல் பகுதியில் 28 பேரும்,  இரண்டாவது பகுதியில் இருபத்தியாறு பேருமாக  54 பேருக்கு வட மாகாணத்தில் இந் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இதில் 54 இலட்சம் ரூபா நிதியை கற்றன் நேஷனல் வாங்கியானது  தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும்


இதை கட்டங்கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றும்  இன்றைய தினம் பருத்தித்துறை ஹற்றன் நைஷனல் வங்கியில் வைத்து கொரோணா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மூவருக்கு முதற்கட்டமாக ரூபாய் 50000/- வீதம் வழங்கி வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பருத்தித்துறை கற்றன் நாவல் வங்கி பருத்தித்துறை முகாமையாளர் நடேசன் கிரிதரன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வட பிராந்திய வியாபார தலமை அதிகாரி க.வாதுலன், நுண்கடன் உறவுத்துறை வட பிராந்திய  முகாமையாளர் செந்தூரன், நுண் கடன் பொறுப்திகாரி பாலகுமார் ஆகியோர் இணைந்து காசோலைகளை வழங்கி வைத்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews