
நேற்று (21) மாலை 04.00மணியளவில் வடமராட்சி கெருடாவில் அமைந்துள்ள அம்பிகை முன்பள்ளி மண்டபத்தில் கிராம முன்னாள் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.

சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி தொடர்பாக விருந்தினர்கள் உரையாற்றியதுடன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசும் வழங்கி கெளரவிக்கப்படார்

குறித்த நிகழ்வில் வல்வெட்டித்துறை சமூர்த்தி வங்கி முகாமையாளர்,
மற்றும் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்