
வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,
விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், நீண்ட காலமாக தேடப்பட்ட சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.