சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிறுவர் விடுதியில் வைத்திய சாலை பதில் அத்தியட்சகர் வே .கமலநாதன் தலமையில் காலை 10:00 மணிக்கு மங்கள விளக்குகள் ஏற்றலுடன் ஆரம்பமானது.
மங்கல விளக்குகளை சிறுவர் வைத்திய நிபுணர் திருமதி சண்முகப்பிரியா, பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன்,சத்திர சிகிச்சை நிபுணர் பிரகதீஸ்வரன், பொது வைத்திய நிபுணர் p. நிறஞ்சினி, மகப்பேற்று வைத்திய நிபுணர் எஸ்.சுயேத்திரா, தோல் வைத்திய நிபுணர் கே. அனுசன் உட்பட பலரும் ஏற்று வைத்ததை தொடர்ந்து சிறுவர்களுக்கான பரிச்களையும் பதில் அத்தியட்சகர்,மருத்துவ நிபுணர்கள், மருத்து அதிகாரிகள், மருத்துவ மனை அதிகாரிகள் என பலரும் வழங்கிவைத்தனர். தொடர்ந்து கருத்துரைகளை பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன், சிறுவர் வைத்திய நிபுணர் திருமதி சண்முகப் பிரியா ஆகியோர் நிகழ்த்தினர்.