
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை தெற்கு பகுதியில் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்துள்ள இரு இளைஞர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதே இடத்தை சேர்ந்த 28 வயதுடைய விஜயபால வின்சன், 19 வயதுடைய ராஜ்பால ரஜீவன் ஆகிய இரு இளைஞர்களுமே படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் பருத்தித்துறை பகுதியில் இரண்டு 17 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றில் இரு இளைஞர்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிட தக்கது.