
கந்தளாய் -அழுத் ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம்(22) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் வாகனம் எதிர் திசையாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லொறியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கல்ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தின் போது காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஹயஸ் வாகன சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.