.கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை களின்போதே இந்தத் தகவல் தெரியவந் துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை – கனடாவுக்கு அனுப்புவ தாக ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சி யாக இடம்பெற்று வருகின்றன என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என வும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார்.