
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆலோசனை குழு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் கூடியுள்ளது.
மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், அரியநேந்திரன், சிறிநேசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி. கே சிவஞானம், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட குகதாசன், சட்டத்தரணி கே.வி.கே தவராசா, சட்டத்தரணி சயந்தன், ஆர்னோல்ட், குலநாயகம், பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.