வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றையதினம்(23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன
அதேவேளை, வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று சனிக்கிழமை (24) காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி இம்முறை கச்சத்தீவு திருவிழாவை இந்திய பக்தர்கள் புறக்கணித்திருந்தனர்.
இன்றைய திருவிழா திருப்பலியில் குருக்கள், அருட் சகோதரிகள், யாழ் மாவட்ட அரச அதிபர், மற்றும் அதிகாரிகள்,முப்படையினர், அரச உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.