பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல் மத்திய வங்கியினால் வெளிடப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் இன்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு மத்திய வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்,
இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும் என தெரிவித்தார்.
வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்கான ஜனாதிபதி செயலணி தமது கடமைகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அடுத்த ஆறு மாதங்களில் பெரு பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் புதிய பொருளாதாரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கிய இந்த ஆறு மாத திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 100வீத வைப்புத் தொகை தேவைப்பாடு இன்று முதல் நீக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன், தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதி மேற்கொள்ளுமாறு மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.