
ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (25.02.2024) இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு கீழ் முருதவெலியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இவ்விரு கிராமங்களிலும் 10,000 இளநீர் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும், மேலும் பல நாடுகளில் இருந்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.