
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெலும் முதன்நாயக்க பொலிஸாரின் அழைப்பினை தவிர்த்து வந்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (26) அவர் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.