
04.01.2024 அன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது, அந்தப் பிரதேசங்களிலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் அவரது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான திணைக்களங்களுக்கான நடமாடும் சேவை இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி, காணி ஆணையாளர், நீர்ப்பாசனம், வனவளவனஜீவராசிகள் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட இருபதிற்கு மேற்பட்ட திணைக்களங்களின் பங்குபற்றலுடன் குறித்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பநிகழ்வில்
காணி மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர், HMBP ஹேரத், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, ஜனாதிபதியின் வடமாகாணத்திற்கான இணைப்பாளர் இ.இளங்கோவன் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் பங்குபற்றலுடன் குறித்த நடமாடும் சேவை தற்போது இடம்பெற்று குறித்த நடமாடும் சேவையில் பிரதேச செயலகங்களில் மக்கள் முன்வைத்த காணிப்பிரச்சனைகளில் தீர்வு கிடைக்காத பிரச்சனைகளை பிரதேச செயலாளர்கள் வந்திருக்கின்ற திணைக்களங்களில் தீர்வு கிடைக்காத விடயங்களை முன்வைக்கின்றனர்.