சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்த குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
அதன்படி குறித்த தினத்திலேயே எம்.ஏ.சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனை அடுத்து உத்தர லங்கா கட்சியும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தன.
இணைய பாதுகாப்புச் சட்டத்தை சான்றுபடுத்தும் போது நீதிமன்றம் வழங்கிய ஒன்பது பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்துவிட்டார் என தெரிவித்தே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது