
பாடசாலை மாணவர்கள் இன்றிலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி (01.03.2024) வரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபட கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.
அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலையின் போது மாணவர்கள் வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.