
சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு இனிமேல் சட்டத்தரணி தொழில் செய்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று(29) உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாகானந்த கொடித்துவக்குவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னர் பிரியந்த ஜயவர்தன,
பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.