
நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
அதனையடுத்து புதிய பொலிஸ்மா அதிபர் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கினார்.
இதேவேளை, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் ஆகியோரையும் புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று சந்தித்து கலந்துரையாடினார்