முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவரது கைதுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாம் கைது செய்யப்பட்டு, நியாயமான காரணமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக பிரதிவாதிகளிடமிருந்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் மனுதாரர் கோரியுள்ளார்.
தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் மனுதாரர் கெஹலிய ரம்புக்வெல்ல, கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.