
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனடிப்படையில் , மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.