
வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் ஶ்ரீவரசித்தி விநாயகருக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
