
சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும், அங்குள்ள தனியார் மலர்சாலையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
பின்னர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இறுதிகிரியைகள் தொடர்பான தகவல்கள் குறித்து இதுவரை எதுவும் தெரியவரவில்லை.
சாந்தனின் உடலை கையளிப்பதற்காக சட்டத்தரணி புகழேந்தியும் சென்னையில் இருந்து அதே விமானத்தில் இலங்கைக்கு வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது