
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்திர இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 பி.ப.01.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
பாடசாலை முதல்வர் கு.கண்ணதாசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சி.இராமச்சந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலய சமூக விஞ்ஞான வளவாளர் ச.உதயநாதன் கலந்து கொண்டார்.
விருந்தினர்கள் மேள தாளத்துடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.
மஞ்சள் வள்ளுவன் இல்லமாகவும்
பச்சை பாரதி இல்லமாகவும்
சிவப்பு இளங்கோ இல்லமாகவும் போட்டி இட்டதில் கணிசமான புள்ளிகளை பெற்று வள்ளுவன் மஞ்சள் இல்லம் முதல் இடத்தை பெற்றுக் கொண்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் நினைவு பரிசில்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.