
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கும் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சிரேஸ்ட சட்டத்தரணி த.தவராசா தலைமையில் நடைபெற்றது.
இவ் கருத்தரங்கு மாநாட்டுக்கு பிரதம அதிதியாக இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, மற்றும் மாகாணங்களின் உள்ள நீதிமன்றங்களுக்கான உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.சி.டபுள்யூ .நவாஸ் ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

மேலும் நீதித்துறையில் உள்ள சலுகைகள், தாற்பரியம், சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் சவால்கள், முக்கியத்தும் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் வாதிடப்படும் வழக்குகள் தொடர்பாக நீதிபதிகள் முன்வைக்கப்பட்ட சவால்களும், நிலுவையில் உள்ள வழக்கு பற்றிய வழக்குகள் பற்றி நீதிபதிகளினால் கலந்துரையாட்டன.
இதில் யாழ்ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதியரசர் எம் மனாஸ், மாவட்ட நீதிமன்ற நீதிபதி என். சதீஸ்குமார், உள்ளிட்ட பிரதேச நீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணி சங்க உறுப்பினர்கள், இளம் சட்டத்தரணிகள் பலரும் கலந்துகொண்டனர்.
