
எரிபொருள், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் குறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் எண்ணெய் மற்றும் மின்சாரச் சலுகைகளை இம்மாதம் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும், ஏப்ரல் மாதத்தில் அவற்றை ஒரே நேரத்தில் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.