
இன்று 03.03.3024 இந்திய இழுவை மடி படகுகளை கண்டித்து மீனவர்களால் கறுப்புக் கொடி போராட்டம் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் போராட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி கொண்டிருந்தவேளை அங்கு வருகை தந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மீனவர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
அதில் இலங்கையின் கடல்தொழில் சட்டத்தை கடைப்பிடித்து சர்வதேச எல்லையை கடக்காது பாதுகாப்பான முறையில் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மீனவர்களின் பாதுகாப்பு நலன்கருதியே குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்ட கடற்படையிடம் இந்திய இழுவைமடி படகுகளை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்