
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்தஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி நிகழ்வுகளில் அவருடன் கூட இருந்து அவரது வழக்குகள் உட்பட பல்வேறு உதவிகளை புரிந்த தமிழக சட்டத்தரணி புகழேந்தி அவர்கள், மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒருங்கிணைத்து குரலற்றோர் குரல் அமைப்பு தலைவர் கோமகன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், உட்பட பலரும் அஞ்சலி உரைகளை நிகழத்தினர்.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சாந்தன் அவர்களது புகழுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சாந்தன் அவர்களது இல்லத்தில் உடலம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதே வேளை சாந்தன் அவர்களது புகழுடல் நீர்கொழும்பிலிருந்து எடுத்துவரும் போது வவுனியாவிலிருந்து மக்கள் வீதி எங்கும் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணத்தில் மாலிசந்தி, நெல்லியடி, உடுப்பிட்டி ஊடாக தீருவில் வரை சென்ற புகழுடலுக்கு மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன் வீதி எங்கும் அவரது நினைவு பதாதைகளை கட்டியுள்ளனர்.
மேலும் வல்வெட்டியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஜேவீபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சாந்தன் அவர்களது புகளுடலிற்க்கு அஞ்சலி செலுத்தியதோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் சாந்தன் அவர்களது புகழுடலிற்க்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
உண்மையில் வடமராட்சி ஒரு சோகமான நிலையிலேயே சாந்தன் அவர்களது மறைவிற்க்கு பின்னர் காட்சியளிக்கிறது