
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இவர்கள் இனம் காணப்பட்டனர் .
அந்தவகையில் நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.