
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை முன்னிட்டு இன்று (05.03.2024) காலை மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் யோகலிங்கம் தலைமையில் காலை 06.00 உடுத்துறையில் இருந்து ஆரம்பமான ஆண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நிறைவு பெற்றது.
அதனை தொடர்ந்து காலை 06.30 மணியளவில் ஆழியவளையில் ஆரம்பமான பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.