
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட j 415 கிராம அலுவலர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் டெங்கு பெருகும் இடங்களை இனங்கண்டு அதனை உடனடியாக தூய்மைப் படுத்தும் செயற்பாடும் நேற்று 05/03/2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதா வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பருத்தித்துறைப் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், கடற் படை, பொலிசார் ஆகியோர் இணைந்திருந்தனர்.
